35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தூத்துக்குடி துறைமுக விபத்து... பலியான ஆப்பரேட்டர்... பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியம் காரணமா.?
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கிரேன் உடைந்து விழுந்ததில் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என துறைமுக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது தூத்துக்குடி துறைமுகம். இங்குள்ள புதிய துறைமுகத்தில் பனாமா நாட்டைச் சார்ந்த கப்பலில் எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக நிலக்கரி, கிரேன் மூலம் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. இந்த வேலையை தூத்துக்குடி மீனவ காலனியைச் சேர்ந்த பாரத் என்பவர் லேபர் காண்ட்ராக்டில் செய்து கொண்டிருந்தார்.
சம்பவம் நடந்த தினத்தன்று லாரியில் இருந்த நிலக்கரியை கப்பலில் கிரேன் மூலம் ஏற்றிக் கொண்டிருந்தபோது கிரேன் உடைந்து கப்பலுக்குள் விழுந்தார் பாரத். இதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவரது உயிர் பிரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தெர்மல் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துறைமுகத்தில் பொருட்களை ஏற்றும் போதும் இறக்கும்போதும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். ஆனால் இங்கு அதிகாரிகளும் சோதனை செய்வதில்லை. இதன் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாக துறைமுக ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.