மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாகத்திற்காக எலி மருந்து பாக்கெட் கிடந்த நீரை குடித்த சிறுவன் பரிதாப பலி; தூத்துக்குடியில் சோகம்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், சொக்கன்குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜன். இவர் கூலித்தொழிலாளி ஆவார். ராஜனுக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், 1 மகள் இருக்கின்றனர். இவரின் இரண்டாவது மகன் விக்னேஷ் (வயது 13), அங்குள்ள விஜயராமபுரம் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று சிறுவன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அக்கம்-பக்கத்து நண்பர்களுடன் விளையாடன்சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவர், இரவில் தாகமாக இருக்கிறது என பாத்திரத்தில் இருந்த நீரை எடுத்து பருகியுள்ளார். பாத்திரத்தில் எலி மருந்து பாக்கெட் இருந்ததாக தெரியவரும் நிலையில், தாகத்தில் அவசரமாக எடுத்து நீரை குடித்துள்ளார்.
சில நிமிடங்களில் சிறுவனுக்கு வாந்தி ஏற்படவே, குடும்பத்தினர் விசாரித்தபோது தண்ணீர் குடித்ததாக கூறியுள்ளார். அதனை பெற்றோர் சோதித்தபோது எலி மருந்து பாக்கெட் கிடந்தது உறுதியானது. உடனடியாக சிறுவனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சிலமணிநேரத்திலேயே சிறுவன் சிகிச்சை அளவின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.