மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்து பேச மறுத்த பெண்.. வீடு புகுந்து காதலன் வெறிச்செயல்.. ஊசலாடும் உயிர்கள்., பதறவைக்கும் சம்பவம்.!
தன்னை காதலித்த பெண்மணி தந்தையின் பேச்சை கேட்டு காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞன் பெண்ணின் கழுத்தை அறுத்த கொடூரம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ந. முத்தையாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்தியா (வயது 20, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). சந்தியா ஆசிரியர் பயிற்சி படித்துள்ளார். இதே ஊரில் வசித்து வரும் இளைஞர் கார்த்திக் (வயது 21). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
சந்தியா - கார்த்திக் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரின் காதல் விவகாரம் சந்தியாவின் தந்தைக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதற்குஅவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, மகளையும் கண்டித்து இருக்கிறார். இதனால் சந்தியா காதலனை விட்டு மெல்ல விலக தொடங்கியுள்ளார்.
இந்த விஷயம் கார்த்திக்கிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, பல இடங்களில் காதலியை இடைமறித்து கேள்வி கேட்டுள்ளார். இதற்கு சந்தியா பதில் அளிக்க மறுப்பு தெரிவிக்கவே, நேற்று காதலியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் பேசக்கூறி வற்புறுத்தி இருக்கிறார்.
இதனை சந்தியா கண்டுகொள்ளாத நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். வலிதாங்க இயலாத சந்தியா அலறவே, அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்துள்ளனர்.
இதற்குள்ளாக கார்த்திக் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க, சந்தியா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தனது வீட்டிற்கு சென்ற கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை முயற்சி எடுக்க, அவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.