மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்வையற்ற நபருக்கு சாலையை கடக்க உதவிய போக்குவரத்து காவலர்.. பாராட்டுகளை குவிக்கும் நெகிழ்ச்சி செயல்.!
சாலையை கடக்க இயலாமல் திணறி நின்ற மாற்றுத்திறனாளிக்கு காவலர் உதவிய நெகிழ்ச்சி காணொளி வைரலாகியுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் உள்ள வ.உ.சி சந்தை முன்புறம் இருக்கும் சிக்னல் பகுதியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி சாலையை கடப்பதற்காக நின்றுள்ளார். அவர் சாலையை கடக்கும் சமயத்தில் மக்கள் அருகில் உதவிக்கு இல்லை.
இதனால் நிகழ்விடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல் அதிகாரி, பார்வையற்ற நபரிடம் விசாரித்து, கைத்தாங்கலாக அழைத்து சென்று சாலையை கடக்க உதவி செய்தார்.
காவல் அதிகாரி மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்ததை அங்கிருந்தவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யவே, அது வைரலாகி காவலரின் செயலுக்கு பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.