மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே... இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட போவதாக கூறிய நபர்... விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய போஸ்ட் ஆபிஸ் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் - சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் சங்கீதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மிகவும் மோசமாக பேசியது மட்டுமின்றி சங்கீதாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட போவதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சங்கீதா இது குறித்து கணவரிடம் கூறி விட்டு மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி கடந்த 25 ஆம் தேதி சங்கீதா எதையோ டம்பளரில் கலக்கி குடிப்பதாக ஓடி சென்று தந்தையிடம் கூறியுள்ளார் ஒரு மகள். உடனே கிருஷ்ணன் ஓடி சென்று பார்த்த போது சங்கீதா மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு சங்கீதாவிடம் போனில் பேசிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.