திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்! மகிழ்ச்சியில் தமிழக மாணவ, மாணவிகள்!
வடதமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3,350 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
இந்தநிலையில் டெல்லியில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற சுகாதாரத்துறை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில், நாடு முழுவதும் புதிதாக 31 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டகளில் தலா 325 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. இதற்காக மாநில அரசு ரூ.130 கோடியும் மத்திய அரசு ரூ.190 கோடி நிதி வழங்க உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட உள்ள நிலையில், தற்போது மேலும் 3 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.