சேதமான தடுப்பணை.! ஆசையுடன் சென்ற அக்கா தம்பி உள்பட 3 பேர் பலி.! சோக சம்பவம்.!



Three people drowned and died

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுதாகர், ஜெயசீலன். சகோதரர்களான இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சுதாகருக்கு சுடர்விழி என்ற 7 வயது மகளும், ஜெயசீலனுக்கு சுருதி(10), ரோகித்(7) என 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களது கிராமத்திலிருந்து இடுகாடு செல்லும் வழியில் உள்ள ஓடையில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. 

ஆனால் அந்த தடுப்பணை சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் ஓடைக்கு அருகே ஆழமுள்ள குழியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில்  சுடர்விழி, சுருதி, ரோகித் ஆகிய மூவரும் அந்த வழியாக சென்றுள்ளனர். அப்போது சேற்றில் வழுக்கி மூன்று பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

drowned

 அவர்கள் மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவர்களை அக்கம் பக்கத்தில் தேடினர். இந்தநிலையில் தடுப்பணையில் நீரில் மூழ்கி 3 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீஸார் சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீரில் மூழ்கி 3 பேரும் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.