மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் பயங்கரம்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.!
சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தை தலில் சந்த், தாய் புஷ்பாபாய், மகன் ஷீத்தல் ஆகியோர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சவுக்கார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் தலில்சந்த் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.