பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திரைப்படமாகும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்; பிரபல முன்னணி இயக்குனர் அறிவிப்பு.!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மையமாக கொண்டு புதிய படம் இயக்க உள்ளதாக பிரபல இயக்குனர் சந்தோஷ் கோபால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தூத்துக்குடியை சுற்றியுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது 100 வது நாள் போராட்ட நாளான மே 22 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது கலவரம் ஏற்பட்டதாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை மையமாக கொண்டு மே 22 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளதாக பிரபல இயக்குனர் சந்தோஷ் கோபால் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டம், பசுமைவழிச் சாலை போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சந்தோஷ் கோபால் பேசும் போது, மே-22 என்ற பெயரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் படமாக்கப்படவுள்ளது. இதற்காக முதல் பார்வை போஸ்டர் ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.