அடக்கடவுளே.. டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்துவின்.., முக்கிய நபர் மரணம்.. கண்ணீருடன் வீடியோ.!



Tic Tok Famous Thoothukudi GP Muthu Friend Passed Away GP Muthu Cry Video

டிக் டாக் செயலி தடை செய்யப்படுவதற்கு முன்னதாக, அதன் வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நபர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.பி முத்து. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகேயுள்ள கிராமத்தை சார்ந்தவர். இவர் மரக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். 

டிக் டாக் செயலியில் தன்னை வசைபாடும் நபர்களை ஏழே செத்தப்பயலே என்று கூறி பிரபலமடைந்த நிலையில், பின்னாளில் இவருக்கு வந்த கடிதத்தை பிரித்து படித்து, தன்னை எப்படியெல்லாம் கழுவி ஊத்துகிறார்கள் என்பதை வெளியுலகுக்கு அப்பட்டமாக சொல்லி பிரபலமானார். 

Tic Tok

அதனைத்தொடர்ந்து, பல யூடியூப் நிறுவனமும் அவரை அழைத்து நேர்காணல் நடத்திய நிலையில், திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்துள்ளன. பிரபல யூடியூப் நிறுவனத்தின் விருதையும் இவர் பெற்றுள்ளார். 

பலர் தன்னை உருவ ரீதியாகவும், பிற ரீதியாகவும் என விமர்சித்து வந்தாலும், அவரது மனத்தால் அவர் தொடர்ந்து உயர்ந்துகொண்டு தான் இருக்கிறார். அவ்வப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அநாதை இல்லங்களுக்கு சென்று, அவர்களுக்கு உணவு ஏற்படுத்தி கொடுத்து, அவர்களுடன் உணவும் சாப்பிட்டு வருவார். 

Tic Tok

இந்நிலையில், ஜி.பி முத்துவின் பள்ளிக்காலத்தில் இருந்து நெருங்கிய நண்பராக இருந்த நபர் இயற்கையை எய்தியுள்ளார். இதுகுறித்த விடியோவை கண்ணீருடன் பதிவு செய்துள்ள ஜி.பி முத்து, எல்லோரையும் சிரிக்கவைத்தேன். ஆண்டவன் என்னை அழ வைத்துவிட்டான். எனது பள்ளிக்கால நெருங்கிய நண்பர் உயிரிழந்துவிட்டார். 

கடவுள் அவரை எதற்கு ஆட்கொண்டார்? எனது நண்பனின் இழப்பு எனக்கு மிகவும் பெரியது. நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகமாக இருந்தாலும், எனது குடும்ப உறுப்பினரை போல இருந்து வந்தான். எனது குழந்தைகளுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். அவன் இறந்துவிட்டான். கடவுளே இல்லை என்று கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.