மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியுடன் காட்டிற்குள் ஒதுங்கிய இளைஞர்! பாய்ந்து வந்த புலி! நடுநடுங்கவைக்கும் பகீர் சம்பவம்!!
கட்சிரோலி மாவட்டம் தேசாய்கன்ஞ் பகுதியை சேர்ந்தவர் அஜித் நாகாடே. 21 வயது நிறைந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தோழியுடன் பைக்கில் சென்றுள்ளனர்.அப்பொழுது அவர்கள் உசேகாவ் காட்டுப்பகுதி அருகே சென்ற போது பைக்கை நிறுத்தி விட்டு இருவரும் காட்டிற்குள் சென்றுள்ளானர்.
அப்போது அங்கு புதர் ஒன்றில் பதுங்கியிருந்த புலி திடீரென அஜித் நாகடே மீது பாய்ந்து அவரை கடுமையாக தாக்கி காட்டுக்குள் இழுத்து சென்றுள்ளது. இதனை கண்டு நடுங்கிபோன அவரது காதலி அங்கிருந்து ஓடிசென்று அருகிலிருந்த கிராமத்திற்கு சென்று இதுக்குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் காடு முழுவதும் தேடியுள்ளனர். அங்கு அஜித் நாகடே சடலமாக கிடந்துள்ளார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.