மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலக்கொடுமை!! கணவன் மனைவி போல் வாழ்ந்த காதலர்கள்... கர்ப்பமான காதலியை கழட்டி விட நினைத்த காதலன்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரும் ஒரு பட்டதாரி பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு காட்பாடி பகுதியில் உள்ள ஒரு டி.என்.பி.எஸ்.சி தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் காதலன் தினேஷ் அப்பெண்ணிடம் காட்பாடியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக இருவரும் வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் அந்தப் பெண் கர்ப்பமானார்.
இதனையடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலர் தினேஷிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தினேஷ் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த அந்த பெண் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் தினேஷின் வீட்டிற்கு சென்று தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனால் தினேஷ் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள தினேஷை தேடி வருகின்றனர்.