மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல அஜித் ரசிகர் மன்ற பெயரை கூறி இலட்சம் பறித்த கேடி; வீடு கட்டி தருவதாக பகல் மோசடி.!
ரசிகர் மன்றமே இல்லாத நடிகர் அஜித் குமாரின் பெயரை பயன்படுத்தி ரூ.1.10 இலட்சம் மோசடி நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஐயப்பன். இவர் தீவிர அஜித் ரசிகராக இருந்து வருகிறார். இவரின் மனைவி ராஜேஸ்வரி. தாழையூத்துப்பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் ஐயப்பன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் தனக்கு நடிகர் அஜித்தை நன்றாக தெரியும்.
அஜித்தின் மேலாளர் தமக்கு நெருங்கிய உறவினர். தல அஜித் மாவட்ட வாரியாக கணக்கெடுத்து ஏழை, எளிய மக்களான தமது ரசிகர்களுக்கு வீடு கட்டித் தரும்படி கூறியுள்ளார். இவை அனைத்தும் அஜித் ரசிகர் மன்றம் மூலம் நடைபெறவுள்ளது.
வீடு கட்ட ரூ. 15 லட்சம் வரை அஜித் ரசிகர் நற்பணி மன்றம் மூலம் தர இருப்பதாகவும், பத்திரப்பதிவு உட்பட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து ரூ.16 இலட்சம் வாங்கிக்கணக்கிலேயே வந்துவிடும் எனவும் கதையழந்து விட்டுள்ளார்.
மேலும், ஐயப்பனை நம்ப வைக்க அஜித்தின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் சுரேஷ் சந்திராவின் உதவியாளர் சங்கர் என்பவர் பேசுவார் என கூறியும் நம்ப வைத்து இருக்கின்றனர். இதனை நம்பிய ஐயப்பனும் சிவாவிடம் ரூ.20 பத்திரத்தில் இரண்டு கையெழுத்தை போட்டுக்கொடுத்துள்ளார்.
பின்னர், பல காரணங்களை கூறி சிவா ரூ.1 இலட்சத்து 10 ஆயிரம் வரை ஐயப்பனிடம் பறித்துள்ளார். தம்பதிகள் தங்கள் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்து சிவாவிடம் தட்டிகேட்கவே, அவர் விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறார்.
இதனையடுத்து, ராஜேஸ்வரி மற்றும் ஐயப்பன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவரிடம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமாரின் பெயரை பயன்படுத்தி ஆசாமி இலட்சக்கணக்கில் ஏமாற்றியுள்ள சம்பவம் அப்பகுதியை அதிரவைத்துள்ளது.