திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போலி இருட்டுக்கடை அல்வாவுக்கு குட்பை.. இனி இருட்டுக்கடை அல்வாவை ஆன்லைன் ஆர்டர் செய்ங்க.. விபரம் உள்ளே.!
திருநெல்வேலி நகரில் செயல்பட்டு வரும் இருட்டுக்கடை அல்வா, உலகப்புகழ்பெற்ற சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இதனை வாங்க உள்ளூர், வெளியூர் நபர்களும் அணிவகுத்து காத்திருப்பார்கள்.
பாரம்பரியமாக தொடரும் இருட்டுக்கடை அல்வா ரகசியம், குடும்பம் குடும்பமாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், பல விற்பனை நிலையங்கள் மற்றும் பொதுஇடங்களில் இருட்டுக்கடை அல்வா பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
போலியான இருட்டுக்கடை அல்வா அதிகளவு மக்களை சென்றடைகிறது. இதனை தடுக்கும் பொருட்டு இருட்டுக்கடை அல்வா நிர்வாகம் தற்போது அதுசார்ந்த முயற்சிகளை முன்னெடுத்து இருக்கிறது.
மற்றும் எங்கள் இணையதளத்தில் ( https://t.co/0PYT19uk2L ) மட்டுமே கிடைக்கப்பெறும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். நன்றி! 🙏
— Iruttukadai Halwa Shop Tirunelveli (@Iruttukadaialwa) May 2, 2024
*வேறு கிளைகள் இல்லை#Fakealert #Fakehalwaalert #Stayalert #Iruttukadaihalwa #Tirunelveli #Tamilnadu
இதுகுறித்து அவர்களின் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை பழமுதிர்நிலையத்தில் இப்போலி இருட்டுக்கடை அல்வா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை எங்களுக்கு தெரிவித்த அன்பு வாடிக்கையாளருக்கு நன்றி!
பொதுமக்கள் இப்போலி அல்வா பாக்கெட்டை நம்பி ஏமாறவேண்டாம். இருட்டுக்கடை அல்வா திருநெல்வேலியில் உள்ள எங்கள் இருட்டுக்கடை மற்றும் எங்கள் இணையதளத்தில் (http://IRUTTUKADAIHALWASHOP.COM) மட்டுமே கிடைக்கப்பெறும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். நன்றி! வேறு கிளைகள் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.