#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேஸ்புக் சவகாசம்.. காதலனுடன் ஜூட் விட்ட சிறுமி.. ஷாஜகானை போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!
17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக காதலன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி, திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் மகளை கண்டறிந்து தரக்கூறி புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி பேஸ்புக்கில் காதல் வயப்பட்டது தெரியவந்தது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜகான் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவன் ஆசை வார்த்தை கூறியதை நம்பி சிறுமி தேனி சென்றதும் அம்பலமானது.
இதனையடுத்து, தேனிக்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், ஷாஜகானை அதிரடியாக கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஷாஜகானின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.