திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகளின் கள்ளகாதலால் வெறிச்செயல்; தலையை துண்டித்து படுகொலை செய்த தந்தை.. நெல்லையில் பயங்கரம்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் கொம்பையா. இவரின் மனைவி முத்துப்பேச்சி. தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முத்துப்பேச்சி தனது தந்தை மாரியப்பனின் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே, முத்துப்பேசிக்கும், உறவினரான ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த தகவல் அறிந்த மாரியப்பன், தனது மகளை கண்டித்து இருக்கிறார். இருப்பினும், அதனை கேட்காத பெண்மணி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
இதனால் மகளின் மீது ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன், சம்பவத்தன்று தனது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று நடுரோட்டில், ஆட்கள் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துள்ளார்.
மேலும், தனது சொந்த மகளின் தலையை தனியே துண்டித்து கொலை நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், முத்துப்பேச்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.