கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்து கைவிட்ட மதகுரு.. காதலிப்பாராம், ஜாலியா இருப்பாராம்., கல்யாணத்துக்கு நோவாம்..!



Tirunelveli Palayankottai College Girl Raped by Love Boy Cheated

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை, கோரிப்பள்ளத்தில் வசித்து வருபவர் இன்பராஜ். இவரின் மகன் மில்டன் கனகராஜ் (வயது 26). மில்டன் பி.எஸ்.சி பயின்றுவிட்டு, கிருத்துவ இறையியல் கல்லூரியில் பி.டி படித்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல கே.டி.சி நகர் கிறிஸ்டியா தேவாலயத்தில் மதகுருவான பணியாற்றுகிறார். 

இவரின் வீட்டருகே கல்லூரி மாணவி வசித்து வரும் நிலையில், இரு குடும்பத்தாரும் பல வருடங்கள் நெருங்கியவர்கள் ஆவார்கள். இதனால் மில்டனும் - மாணவியும் இயல்புடன் பேசிவந்த நிலையில், மாணவி கல்லூரிக்கு சென்றதும் காதல் வலை வீசிய மில்டன் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். 

tirunelveli

மில்டனுக்கு பெண் பார்க்க பெற்றோர் தயாராகி வந்த நிலையில், மாணவியிடம் மில்டனும் இதுகுறித்து கேட்டுள்ளார். மாணவி தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என்று கூறவே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மில்டன் மற்றும் அவனின் பெற்றோர் மாணவியை மிரட்டியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் பாளை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மதகுரு மில்டனை கைது செய்தனர்.