அது என்ன அதிசிய கிணறு?.. இது முதலா?.. உங்க உருட்டெல்லாம் புது ரகம் தான்.!



Tirunelveli Thisayanvilai Wonder well about Earth Aquifer Statement

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையை அடுத்துள்ள ஆயங்குளம் பகுதியில், பல்லாயிரம் கன அடி நீரினை உள்வாங்கியும் நிரம்பாத அதிசிய கிணறு உள்ளது. சமீபத்தில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக, திசையன்விளை தாலுகாவில் இருக்கும் கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள குளங்கள் பெரும்பாலும் நிரம்பிய நிலையில், ஆயங்குளம் ஆற்றுப்படுகை நீர் நிரம்பி வெளியேறுகிறது. 

இந்த நீர் கிணற்றுக்குள் செல்லும் நிலையில், தொடக்கத்தில் வினாடிக்கு 50 கன அடி நீர் சென்றுள்ளது. பல நாட்கள் நீர் தொடர்ந்து சென்றும் நிரம்பாத நிலையில், தண்ணீர் எங்கு செல்கிறது என்ற கேள்விக்கு விடையில்லை. இம்மர்மம் பல வருடமாக கிணற்றில் நீடித்து வந்துள்ளது. 

tirunelveli

இதுகுறித்து உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், "சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கி.மீ தொலைவில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், உப்பு நீர் நல்ல நீராக மாறவும் கிணற்று நீர் உதவி செய்கிறது" என்று தெரிவித்தனர். இந்த தகவல் வெளியுலகுக்கு தெரியவரவே, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 

இந்த தகவல் சென்னை ஐ.ஐ.டி குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்யவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐ.ஐ.டி குழு பேராசியர் வெங்கட்ரமணன், சீனிவாசன் தலைமையிலான பேராசிரியர்கள், மாணவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு கிணற்றுக்கு வந்து ஆய்வு செய்தது. 

tirunelveli

உள்ளூர் மக்களிடமும், விவசாயிகளிடமும் கிணறு குறித்து விசாரணை செய்துவிட்டு, கிணற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர் மாதிரியை சேகரித்துள்ளனர். இது குறித்து விபரம் அறிந்தவர்களிடம் கேட்டால், இது பூமியில் நடக்கும் வழக்கமான நிகழ்வுதான். 

பெரிய ஆறுகளே ஒரு கட்டத்தில் வந்து எங்கு சென்று சேருகிறது? என்ற விடை இல்லாமல் நீர் பூமிக்கடியில் செல்கிறது. பூமிக்கு மேலே நீர் ஆறுகளில் செல்வதை போல, பூமிக்கு அடியிலும் ஆறுகள் உள்ளன. அதன் வாயிலாக பூமிக்கு அடியிலோ அல்லது மற்றொரு நீர் பாதை உள்ள இடத்திற்கோ நீர் தொடர்ந்து செல்கிறது என்று தெரிவிக்கின்றனர். 

அதுகுறித்த பல விடியோக்கள் டிஸ்கவர், பி.பி.சி எர்த் போன்ற தொலைகாட்சிகளில் தொடராகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.