மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலைபார்த்த இடத்திலேயே கைவைத்த பெண்.. 47 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி மீட்பு.. காட்டிக்கொடுத்த சி.சி.டி.வி.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் வள்ளியூர் - ராதாபுரம் சாலையில் தங்கநகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் 4 பேர் பணியாற்றி வருகிறர்கள். கடந்த சில மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன், சரிவர கடைக்கு வருவது இல்லை.
இந்நிலையில், கடையில் இருந்த நகைகளை ராமச்சந்திரன் எதர்ச்சையாக சோதனை செய்கையில், சில நகைகள் மாயமானது உறுதியானது. இதனால் கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களை சி.சி.டி.வி கேமிரா மூலமாக கண்காணித்து வந்துள்ளார்.
அப்போது, கடையில் பணியாற்றி வந்த கோரியூர் கிராமத்தை சேர்ந்த சுபா என்ற பெண்மணி நகையை திருடியது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் சுபாவிடம் இருந்த 47 சவரன் நகைகள் மற்றும் 4 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகளை மீட்டனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.