மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சா போதையில் அலப்பறை செய்த 15 வயது சிறுவன்... மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்.!
கஞ்சா போதையில் தகராறு செய்த இளைஞன் மக்கள் பிடித்து அடித்து நொறுக்கப்பட்டான்.
இளம் வயதுள்ள சிறார்கள் இன்றுள்ள காலத்தில் மது, புகை, கஞ்சா உட்பட உடல்நலத்தை சீரழிக்கும் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.
திருப்பத்தூரில் உள்ள கந்திலி பேருந்து நிலையம் அருகே நேற்று 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் போதையில் சாலையில் போவோர் வருவோரை இடைமறித்து தகராறு செய்துகொண்டு இருந்தான்.
To Watch Video: https://www.facebook.com/reel/603767877930185/?s=1x1
சிறுவனின் செயல் தொடர்ந்து அட்டகாசத்தை ஏற்படுத்தி பரபரப்பை அதிகரிக்க, ஆவேசமடைந்த உள்ளூர் மக்கள் சிறுவனை கயிற்றால் மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் சிறுவன் கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்பதும், நேற்று அளவுக்கு அதிகமான கஞ்சா அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.