திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடிப்பாவி.. கள்ளக்காதலுக்காக அன்பு கணவரை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த மனைவி... துடிதுடிக்க பறிபோன உயிர்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் விஜயகுமார் (வயது 29). இவரின் மனைவி வினிதா (வயது 25). தம்பதி இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
விஜயகுமாரின் நண்பர் ராகவேந்திரன் (வயது 24) என்பவர் அவ்வப்போது தனது நண்பரின் வீட்டிற்கு நட்பு ரீதியாக வந்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து வினிதாவுக்கும், ராகவேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நட்பாக தொடங்கி பின்னாளில் தகாத உறவாக மாறவே, கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் கள்ளக்காதல் உறவுக்கு கணவர் தடையாக இருப்பதாகவும், அடிக்கடி அவர் தொந்தரவு செய்து வருகிறார் எனவும் ராகவேந்திரனிடம் வினிதா தெரிவித்துள்ளார்.
இதனால் சம்பவத்தன்று விஜயகுமாருக்கு அதிக அளவு மதுபானம் ஊற்றி கொடுத்த ராகவேந்திரன், தனது நண்பனை கொலை செய்து புதைத்திருக்கிறார். இதுதொடர்பாக தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தவே உண்மை அம்பலமானது.