திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செங்கல்சூளையில் தோல் கழிவுகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்.. ஆம்பூர் அருகே மக்கள் புகார்.!
தோல் மற்றும் காலனி தொழிற்சாலை கழிவுகளை வைத்து செங்கல் தயாரிக்க தீ வைப்பதால் ஏற்படும் புகை மூச்சுத்திணற வைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் விநாயகபுரம் பகுதியில் செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகிறது. இதே பகுதியில் காலனி தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த காலனி தொழிற்சாலையில் கிடைக்கும் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறையாகும்.
இந்த நிலையில், காலனி தொழிற்சாலையில் கிடைக்கும் தோல் கழிவுகளை, செங்கல்சூளை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து, செங்கல்சூளையில் எரிப்பதாக தெரியவருகிறது. இதனால் அங்குள்ள பல கிராம மக்கள் மூச்சுத்திணறலால் அவதியுறுகின்றனர்.
காலனி மற்றும் அதன் கழிவு பொருட்கள் எரிக்கப்படுவதால், அதனால் வெளிவரும் கரும்புகை மற்றும் துர்நாற்றம் மக்களை பெரிதும் பாதிக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக கிராம மக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.