திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மோசடி வேட்பாளருக்கு பட்டை நாமம் சாத்திய மக்கள்.. பித்தளை தங்க பஞ்சாயத்தில் உச்சகட்ட அவமானம்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகராட்சி, 36 ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட மனைவிக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், மனவிரக்தியடைந்த திமுக பிரமுகர் சுயேட்சையாக மனைவியை தேர்தலில் களமிறங்கினார். திமுக பிரமுகரான துரைபாண்டியன், மனைவி மணிமேகலையை சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய நிலையில், வாக்காளர்கள் மனைவிக்கு வாக்களிக்க வேண்டும் என 1,500 பேருக்கு தலா 1 கிராம் எடையுள்ள தங்க காசு என பித்தளையை வழங்கினார்.
தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்றதும் தங்க காசினை அடகு வைத்து வருமானம் பார்க்கலாம் என மக்கள் அடகு கடைக்கு சென்ற போது பித்தளை சம்பவம் அம்பலமாகவே, ஆத்திரமடைந்த 36 ஆவது வார்டு மக்கள் வேட்பாளரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தேர்தலில் வெற்றி அடைந்தாலும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறி போர்க்கொடி உயர்த்தினர். இந்த விஷயம் தொடர்பான செய்திகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. சம்பவம் நடந்த ஆம்பூர் நகராட்சி 36 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் 983 வாக்கு பெற்று வெற்றியடைய, திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சகிதா பானு 531 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பித்தளையை கொடுத்து தங்கமென ஏமாற்றிய வேட்பாளர் மணிமேகலை துரைபாண்டியன் 330 வாக்கு பெற்று தோல்வியை தழுவினார்.