திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலன் இறந்த துக்கம் தாளாது, 16 வயது சிறுமி இரயில் முன் பாய்ந்து விபரீதம்.! பெற்றோர் கண்ணீர் கதறல்.!!
காதலன் தற்கொலை செய்துகொண்ட தகவலை அறிந்த 16 வயது சிறுமியும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வடபுதுப்பட்டு சின்னதாய் நகர் பகுதியை சார்ந்தவர் சம்பத். இவரது மகன் ரமணன் (வயது 21). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்துள்ளார். இதே பகுதியில் உள்ள சுகர்மில் ஓம் தெருவை சார்ந்தவர் பிரியங்கா தேவி (வயது 16). இவர் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
ரமணன் பள்ளி மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை சிறுமியிடம் தெரிவித்து அதற்கு சம்மதம் வாங்கியதை தொடர்ந்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகமாக இருந்த நிலையில், சிறுமிக்கு 16 வயதே ஆவதால் அவரின் பெற்றோர்கள் படிக்கும் வயதில் காதல் வேண்டாம். கல்லூரி படிப்பு முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ரமணனிடம் சென்று சிறுமியின் பெற்றோர், "மகளிடம் பேச வேண்டாம். அவர் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார்" என்று தங்களின் குடும்ப நிலையை கூறி கண்டித்து இருக்கின்றனர். வேறொரு வழக்கு தொடர்பாகவும் ஆம்பூர் காவல் துறையினர் ரமணனிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரமணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரின் உடலை மீட்ட காவல் துறையினர், ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவல் ரமணனின் காதலியான சிறுமி பிரியங்கா தேவிக்கும் தெரியவந்துள்ளது.
காதலன் இறந்த துக்கம் தாளாது இருந்த சிறுமி பிரியங்கா தேவி, அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறி பச்சக்குப்பம் இரயில் நிலைய தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக பெங்களூர் நோக்கி சென்ற அதிவிரைவு இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.