திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"வயிற்று வலியை கண்டுபிடிக்க பேண்டை கழட்டு" - பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மருத்துவர்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி..!
திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு, பெண்மணி ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த மருத்துவர், பெண்ணின் பேண்டை கழற்ற சொல்லியதாக தெரியவருகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி, அங்கிருந்து வெளியேறி தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, சமாதானம் பேசி அனுப்பி வைக்க முயற்சித்ததாக தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களை தாங்களே தாக்கிவிட்டு, மருத்துவமனையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதாக புகார் அளித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் இதனைப்போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே மருத்துவரின் சுயரூபம் தொடர்பான தகவல் தெரியவரும் என பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவிக்கிறார்.