திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலை ஏற்க மறுத்த அக்கா மகள் கழுத்தறுத்து படுகொலை; கொலையை அரங்கேற்றி கூலாக டீக்கடையில் இருந்த கொலைகார தாய்மாமன்.!
கொலை வழக்கில் தொடர்புடைய தாய்மாமன், 17 வயது குறைவான அக்கா மகளுக்கு ஆசைப்பட்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, கே. பந்தாரப்பள்ளி பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண், கல்லூரியில் முதல் ஆண்டு பயின்று வருகிறார். இவரின் தாய்மாமா சரண்ராஜ் (வயது 35). இவர் கல்லூரி மாணவியை ஒருத்தலகையாக காதலித்து வந்துள்ளார்.
இவர் புகைப்பட கலைஞர் மற்றும் ஓட்டுநராக வேலை பார்த்துவந்த நிலையில், தன்னில் இருந்து 17 வயது குறைந்த அக்கா மகளை திருமணம் செய்வதற்கு எண்ணி, அக்காவிடமே அவரின் மகளை வரன் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
சரண் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் என்பதால், அக்காவே தனது தம்பியிடம் மகளை திருமணம் செய்துவைக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். நேற்று கல்லூரி விடுமுறை என்பதால், மாணவி வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர்.
வீட்டில் அக்கா மகள் தனியாக இருப்பதை அறிந்த சரண்ராஜ், வீட்டிற்கு சென்று மீண்டும் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். திருமணம் செய்ய மிரட்டவும் செய்துள்ளார். அதற்கு கல்லூரி மாணவி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சரண்ராஜ் கத்தியால் அக்கா மகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர், தான் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு சரண்ராஜ் ஓட்டம் பிடித்துள்ளார். கொலை சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் நாட்றாம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர், சரண்ராஜின் கடிதத்தையும் கைப்பற்றி அவரை விரைந்து தேடி வந்தனர். இதற்கிடையில், டீக்கடையில் பதற்றமின்றி இருந்த சரணை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.