#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"முந்தைய வைகோ அவர் இல்லை; மதிமுக திமுகவில் இணைந்துவிட்டது:" - திருப்பூர் துரைசாமி பரபரப்பு பேட்டி.!
ச.ம.உ மற்றும் நா.உ பதவிகளுக்கு மதிமுகவினர் திமுகவினராக மாற்றப்பட்டு தேர்தலில் களமிறக்கப்படுகிறார்கள். இது திமுகவில் மதிமுக இணைந்துவிட்டதை உறுதி செய்கிறது என திருப்பூர் துரைசாமி விமர்சித்தார்.
மதிமுகவில் மூத்த தலைவராக இருந்து வந்த திருப்பூர் துரைசாமி, கடந்த சில மாதமாகவே தலைமையின் மீது மனவருத்தத்தில் இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகின. அவர் அக்கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டன.
ஆனால், மதிமுகவின் தலைமையோ, துரைசாமியின் தரப்போ இத்தகவல் குறித்து எவ்வித கருதும் கூறாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று திருப்பூர் துரைசாமி தான் மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இன்று அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், "மதிமுக இனி தனியாக வளரக்கூடிய வாய்ப்பு இல்லை. ஏனெனில் மதிமுக இயக்கதோர் தங்களின் கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்த பின்னரே சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவில் அடிப்படை உறுப்பினராகி வாய்ப்பை வழங்குகிறார்கள்.
இதனால் மதிமுக என்ற இயக்கம் ஏற்கனவே திமுகவுடன் இணைந்துவிட்டது. இனி தனிக்கட்சி வைக்க வேண்டிய சூழ்நிலை இல்லை. வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகள் முன்பு வரை சிறப்பாக இருந்தது. இன்று அவை இல்லை. நான் எந்த கட்சியிலும் இனி இணையப்போவது இல்லை. அரசியல் வாழ்க்கையில் இருந்து நான் ஒதுங்குகிறேன்" என பேசினார்.