#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருடவந்து இளைஞரின் முன்பு ஆடையை அவிழ்த்து நின்ற 2 பெண்கள்.. வெடவெடத்துப்போன இளைஞர்.. நொடியில் மாறிய காட்சி.!
பண்ணை வீடுகளை குறிவைத்து திருட்டு செயலில் ஈடுபடும் 4 பெண்களில் 2 பேர் சிக்கிக்கொண்டனர். ஆணின் முன்பு ஆடையின்றி நின்று எஸ்கேப் ஆகும் டெக்னீக் தோற்றுப்போனதால் நொடியில் காட்சி மாறி சிக்கிய சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்து பண்ணை வீடும் இருக்கிறது. அங்கு குடும்பத்தினர் யாரும் இல்லை. அனைவரும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் பண்ணை வீடு பெரும்பாலும் பூட்டியே கிடைக்கும். அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து செல்வார்.
சம்பவத்தன்று, அவர்களின் வீட்டை 2 பெண்கள் கவனித்துக்கொண்டு இருந்துள்ளனர். பண்ணை வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்த இளைஞர், பெண்களை கவனித்து இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு புரிந்துள்ளது 2 பெண்கள் வெளியே நின்று காவலுக்கு இருக்கிறார்கள், பிற 2 பேர் உள்ளே பூட்டை உடைத்து சென்றுள்ளார்கள் என்பது உறுதியானது.
விரைந்து பெண்களை பிடிக்க வந்த இளைஞரின் முன்னிலையில் ஆடையை களைந்த கும்பல், இளைஞரின் கவனத்தை திசைதிருப்பி தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது, வீட்டின் உரிமையாளர் வந்துவிட்டதால் பெண்கள் உஷாராகி தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் அனைவரும் சேர்ந்து பெண்களை பிடித்துள்ளனர்.
இவர்களை அங்குள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்கவே, அங்கு விசாரணை நடந்துள்ளது. விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பார்வதி, சித்ரா என்பது உறுதியானது. இவர்கள் 4 பேர் கொண்ட குழு ஆவார்கள். பகல் நேரங்களில் தனியாக உள்ள பண்ணை வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டு இரவில் திருட்டு செயலில் ஈடுபடுவதும் அம்பலமானது.
சம்பவத்தன்று ஜோத்தம்பட்டியில் நோட்டமிட்டபோது ஆட்கள் இல்லாததால் பகலில் திருடலாம் என திட்டமிட்டு சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களை ஆண்கள் துரத்தி வந்தால் ஒட்டுமொத்தமாக ஆடையை கலைந்து கவனத்தை திசைதிருப்பி தப்பி செல்வதை வாடிக்கையாகி இருக்கின்றனர். அதேபோன்று ஜோத்தம்பட்டியிலும் முயற்சித்து சிக்கிக்கொண்டுள்ளனர்.