மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவில் பூசாரி செய்யும் காரியமா இது?.. பேஸ்புக்கில் சிறுமிகள் ஆ.,படம் பதிவேற்றம்.! அதிரடி கைது.!!
சிறுமிகளின் ஆபாச படங்களை போலியான கணக்கு மூலமாக முகநூலில் பதிவேற்றிய பூசாரி அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், கணியூர் அஹ்ரகார வீதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன் என்கிற பாலாஜி (வயது 50). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. அங்குள்ள வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் வைத்தியநாதன் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், போலியான முகநூல் கணக்கை தொடங்கிய வைத்தியநாதன், சிறுமிகளின் ஆபாச படங்கள் தொடர்பான காணொளிகளை பதிவேற்றி இருக்கிறார். இந்த விஷயம் குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரியவரவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கை வைத்து வைத்தியநாதனை அதிரடியாக கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.