மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 வயது இன்ஸ்டா காதலனுடன் குடித்தனம் நடத்திய 16 வயது சிறுமி மர்ம மரணம்; காதல் கசந்ததால் துயரம்?.. திருப்பூரில் அதிர்ச்சி.!
16 வயதினிலே ஏற்பட்ட பருவ ஈர்ப்பை பெரிதாக நினைத்து காதல் வயப்பட்ட சிறுமி, காதலனை நம்பி பெற்றோரை துறந்து ஓட்டம் பிடித்து இறுதியில் தனது மூச்சையும் நிறுத்திக்கொண்ட சோகம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், கணபதிபாளையம், கருப்பசாமி நகரில் வசித்து வருபவர் சங்கர் (வயது 30). இவருக்கு சொந்த ஊர் சிவகங்கை ஆகும். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகமான 16 வயது சிறுமியை காதலித்து, இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், சிறுமி சந்தேகத்திற்கு இடமான வகையில் மரணம் அடைந்தார். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சங்கரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதாவது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (வயது 30), அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நட்பாக பேசியவர்கள், பின்னாளில் காதல் வயப்பட்டுள்ளனர்.
இருவரும் ஒருவறையொருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமி 16 வயது சிறுமியை திருமணம் செய்து பல்லடம் அழைத்து வந்து இருக்கிறார். அங்கு கருப்பசாமி நகரில் வசித்து வந்த தன்ராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறி இருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 09ம் தேதி சிறுமி வீட்டிற்குள் தற்கொலை செய்தவாறு சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், காதல் ஜோடி திருமணம் செய்து வாழத்தொடங்கிய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சிறுமி தற்கொலை செய்தது தெரியவந்தது.
சிறுமிக்கு 16 வயது ஆவதால், காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்ததும் கொலையா? தற்கொலையா? என்பதும் உறுதி செய்யப்படும்.