மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உறங்கிக்கொண்டு இருந்த பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரம் முயற்சி.. திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் துணிகரம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், எம். ஊத்துக்குளி கிராமத்தில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணவன் - மனைவி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றுவிடவே, அவரின் மனைவி வீட்டில் தனியே உறங்கியுள்ளார். அப்போது, அதே நிறுவனத்தில் பணியாற்றிவரும் 3 வடமாநில இளைஞர்கள் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அங்கு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கவே, உறக்கத்தில் இருந்து எழுந்த பெண்மணி அலறியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வரவே, காம கொடூரர்கள் தப்பி சென்றுள்ளனர். கயவர்களின் முயற்சி தோல்வியடைந்த நிலையில் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் தப்பிச்சென்ற வடமாநில இளைஞர்கள் அம்ரு இஸ்லாம், அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.