மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் கஞ்சா, போதைசாக்லேட் விற்பனையில் களமிறங்கிய வடக்கன்ஸ்.. பரபரப்பு கைது.. பகீர் தகவல்.!
பெருமாநல்லூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதைசாக்லேட் விற்பனை செய்து வந்த 5 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர், நான்குரோடு மற்றும் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கஞ்சா உட்பட போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பெருமாநல்லூர் நான்குரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை அதிகாரிகள் சுற்றிவளைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதன்மோகன் சாகு (வயது 26), விஸ்வநாதன் சாகு (வயது 23) என்பது தெரியவந்தது.
இவர்கள் திருப்பூரில் உள்ள கருவம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, கஞ்சா விற்பனை செய்ததும் அம்பலமானது. ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் இதனைப்போல 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுக்குமார் (வயது 22), ராஜ் குமார் (வயது 23), தர்மேந்திரகுமார் (வயது 22) என்பது தெரியவந்தது.
இவ்வாறாக நேற்று ஒரேநாளில் 5 பேர் வெவ்வேறு இடங்களில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா, 2 கிலோ போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் பெருமாநல்லூர் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று வரும்போது, அவர்களின் ஊர்களில் மலிவாக எளிதில் கிடைக்கும் கஞ்சாவை பொட்டலம் பொட்டலமாக தங்களுடன் எடுத்து வருவது வாடிக்கையாகி இருக்கிறது. குறிப்பாக கட்டுமான மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள், தங்களின் உடமைகளுடன் கஞ்சாவை கடத்துவது அவர்களுக்குள் இயல்பாகவே நடந்து வருகிறது.
இதனால் இரயில் வழியே தமிழகத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்களை இரயில் நிலையங்களில் வைத்து சோதனை செய்தால் மட்டுமே பெருமளவு புழக்கமாகப்போகும் கஞ்சாவை அதிகாரிகளால் தடுக்க இயலும் என்பது விபரம் அறிந்தவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.