மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவி கல்குவாரி பாறைக்குழியில் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.. காதல் விவகாரத்தில் பயங்கரம்..!
2 மாணவர், மாணவியுடன் வெளியே சென்ற மாணவி கல்குவாரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார். இவரின் மனைவி சந்தியா தேவி. தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் மூத்த மகள் காயத்ரி (வயது 16). இவர் அவிநாசியில் இருக்கும் அரசுபெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இங்குள்ள ஆண்கள் பள்ளியில் பயின்று வந்த மாணவனுக்கும், சிறுமி காயத்ரிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்த தகவல் இருவரின் பெற்றோருக்கும் தெரியவரவே, அவர்கள் தங்களின் பிள்ளைகளை கண்டித்து இருக்கின்றனர். காயத்ரியை அவரின் பெற்றோர் திருப்பூரில் இருக்கும் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இதனால் அவர் விடுதியில் தங்கியிருந்தவாறு பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி பள்ளிக்கு சென்ற காயத்ரி, விடுதிக்கு வரவில்லை. அவரை எங்கு தேடியும் காணாததால், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், நேற்று காலையில் அங்குள்ள எஸ்.ஆர்.கே நகர் பகுதியில் பாறைக்குழியில் சீருடை அணிந்த மாணவியின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில், சடலமாக மீட்கப்பட்டது காயத்ரி என்பது உறுதியானது.
இதனையடுத்து, காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாணவர்கள் பரமேஷ், பிரேம் மற்றும் மாணவி ஆகியோருடன் காயத்ரி வெளியே சென்றது தெரியவந்தது. இவர் மனமுடைந்து பாறைக்குழியில் விழுந்து தற்கொலை செய்தாரா? காதல் விவகாரத்தில் மாணவர்களால் கொல்லப்பட்டாரா? என பல கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.