#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ளக்காதலை ஊராரிடம் அம்பலப்படுத்திய கோவில் பூசாரி கொலை; முன்விரோதத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!
முன்விரோதத்தில் பூசாரி கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்காதலை ஊராரிடம் போட்டுக்கொடுத்த பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில், வேளகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 51). இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் பூசாரியாக பணியாற்றுகிறார். மாரிமுத்துவின் மனைவி மல்லிகா (வயது 45). தம்பதிகளுக்கு மோகன்ராஜ் (வயது 35), சுகன் (வயது 16) என்ற மகன்களும் இருக்கின்றனர். இதில், மல்லிகா வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார்.
சம்பவத்தன்று, மாரிமுத்து கோவிலுக்கு சென்று நண்பரை பார்த்துவருவதாக புறப்பட்டு சென்ற நிலையில், இரவு ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பார்த்தபோது ஸ்விச் ஆப் என வந்துள்ளது. இதனால் கணவரின் நிலை குறித்து தெரியாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், மாரிமுத்து சந்திக்க சென்றவர் யார்? என்ற கோணத்தில் நடந்த விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பிரேம்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது. பிரேம் குமாரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. முன்விரோதத்தில் இருவரும் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று மாரிமுத்துவை பிரேம் குமார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் மாரிமுத்துவை பிரேம் குமார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை அமராவதி ஆற்றில் வீசியுள்ளார். இதனையறிந்த அதிகாரிகள் தீயணைப்பு படையினர் உதவியுடன் மாரிமுத்துவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பிரேம் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது, பிரேம் குமாருக்கும் - அப்பகுதியை சேர்ந்த திருமணம் முடிந்த பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் முத்துமாரிக்கு தெரியவரவே, அவர் ஊராரிடம் பிரேம்குமாரின் கள்ளக்காதல் தொடர்பான விவகாரத்தை தெரிவித்துள்ளார். இதனால் அவமானம் தாங்க இயலாத பிரேம்குமார் மாரிமுத்துவை கொலை செய்துள்ளார்.