மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை; பால் ஊற்றச்சென்ற பால்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முதல்நாள் இரவில் நடந்த சண்டையை அக்கம் பக்கத்தினர் தீர்த்துவைக்க, நள்ளிரவில் மனைவியை கொலை செய்த கணவன் தானும் உயிரைமாய்த்த சோகம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேல் (வயது 55). இவரின் மனைவி புஷ்பவதி (வயது 50). தம்பதிகளின் வீட்டில் நேற்று பால் கொடுக்க பால்காரர் வருகை தந்த நிலையில், நீண்ட நேரம் ஆகியும் யாரும் வரவில்லை.
இதனால் தம்பதியை அழைக்க பக்கத்து வீட்டில் இருப்போரிடம் பால்காரர் தகவலை தெரிவிக்க, அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தங்கவேல் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார். புஷ்பவதி உயிரிழந்து இருந்துள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், தம்பதியடையே சம்பவத்தன்று சண்டை நடந்து கைகலப்பாக மாறியுள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.
ஆனால், உறங்க சென்றவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவி புஷ்பவதியை கொலை செய்த கணவர் தங்கவேல் தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.