மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை ஏற்காத பள்ளி மாணவியின் மீது சரமாரி தாக்குதல்; கதறக்கதற வெளுத்தெடுத்த மக்கள்; அப்பாவி நண்பர்களை சிக்கவிட்டு ஓடிய புள்ளிங்கோ.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் வசித்து வருபவர் மாதேஷ் (வயது 22). இவரின் தங்கை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார். நேற்று மாலை தனது தங்கையை அழைத்து வர நண்பர் வினோத் குமார் (வயது 23), தாமஸ்குட்டி (வயது 22) என்பவர்களுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறார்.
வினோத் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்கள் மூவரும் மதுபோதையில் பள்ளிக்கு முன்பு காத்திருந்துள்ளனர். அச்சமயம் பள்ளியில் இருந்து வந்த மாணவியை தாமஸ்குட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள், தாமஸை பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால், அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிடவே, இவர்களுடன் வந்த மாதேஷ் மற்றும் வினோத் குமார் ஆகியோரை பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதனால் இருவருக்கும் இரத்தக்காயம் ஏற்பட, தகவல் அறிந்து வந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் இளைஞர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், தாமஸ்குட்டி அப்பள்ளியில் பயின்று வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததும், மனைவி காதலை ஏற்க மறுத்ததால் போதையில் அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதும் அம்பலமானது. இதனையடுத்து,தப்பியோடிய தாமஸ் குட்டியை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.