கணவனை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த மனைவி.. 10 வருடமாக டிமிக்கி கொடுத்த கள்ளக்காதல் ஜோடி கைது.!



Tiruvannamalai Arani Affair Couple Murder Man Abused Bail Finally After 10 Years Both Arrested

கள்ளகாதலுக்காக கணவனை கொலை செய்த மனைவி விசாரணைக்கு ஆஜராகாமல் 10 வருடமாக நீதிமன்றத்தை அவமதித்த நிலையில், கள்ளக்காதல் ஜோடி அதிரடியாக கைது செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, மருசூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுந்தரமூர்த்தி. இவரின் மனைவி செந்தாமரை. தம்பதிகளுக்கு இடையே அதிகளவு வயது வித்தியாசம் சென்று கூறப்படுகிறது. செந்தாமரையின் அக்காவை திருமணம் செய்ய சுந்தரமூர்த்திக்கு பேசி முடிக்கப்பட்ட நிலையில், அவர் காதல் திருமணம் செய்ததால் செந்தாமரை சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். 

இதனால் தாலி கட்டிய கணவருடன் விருப்பமில்லாமல் வாழ்ந்து வந்த செந்தாரமைக்கு, அதே கிராமத்தை சேர்ந்த தருமன் என்பவரின் மகன் மதியழகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் சுந்தரமூர்த்திக்கு தெரியவரவே, கள்ளக்காதல் ஜோடி சுந்தரமூர்த்தியை கடந்த 2009 ஆம் வருடம் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துள்ளது. 

Tiruvannamalai

இந்த விஷயம் தொடர்பாக ஆரணி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே, இருவரும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஆரணி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த இருவரும் கடந்த 10 வருடமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் நடந்த விசாரணையில், நீதிபதிகள் கள்ளக்காதல் ஜோடியான மதியழகன் - செந்தாமரையை கைது செய்ய ஆணை பிறப்பித்தார். 

இதனையடுத்து, ஆரணி காவல் துறையினர் தலைமறைவாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அருகே வைத்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் விசாரணைக்கு சமர்ப்பித்து, ஜாமின் விதிமுறைகளை மீறியதால் சிறையில் அடைத்தனர்.