மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமியை சீரழித்து, வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்.. 4 பேராக வேட்டையாடிய பயங்கரம்.. தமிழகமே பேரதிர்ச்சி.!
11 ஆம் வகுப்பு மாணவியை காதல் வலையில் வீழ்த்தி கற்பழித்த கொடூரன், அதனை வீடியோ எடுத்து 3 நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் சிறுமியை வன்கொடுமை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை சார்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிட்னர் வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மாணவி திடீரென மயங்கி விழுந்தார். மகளை மீட்ட பெற்றோர் தச்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பேரதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகள் நல உதவி மைய தொடர்பு நம்பரான 1098 க்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தி, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் பேரதிர்ச்சி உண்மையை கண்டறிந்துள்ளனர். அதாவது, மாணவியை காமுக வாலிபன் காதல் வலையில் வீழ்த்தி, ஆசை வார்த்தை கூறி அத்துமீறி இருக்கிறான்.
இதனை மாணவிக்கு தெரியாமல் விடியோவாக எடுத்து வைத்தவன், தனது 3 நண்பர்களுக்கு பகிர்ந்து இருக்கிறான். அவர்கள் சிறுமியை மிரட்டி தனித்தனியே வெவ்வேறு தருணத்தில் அத்துமீறியுள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார் என்ற பரபரப்பு தகவல் அம்பலமானது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுமி காதலன் உட்பட 4 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.