மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுடசுட வந்த காடை வறுவலில் கூலாக நெளிந்த புழுக்கள்.. அதிர்ந்துபோன உணவுப்பிரியர்.. பகீர் சம்பவம்.!
ஆரணியில் காடை வறுவல் ஆர்டர் செய்தவருக்கு நெளியும் புழுக்களுடன் உணவு பரிமாறப்பட்ட சமபவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இவரின் உணவகத்தில் மாம்பாக்கம் கிராம ஒன்றிய குழு உறுப்பினர் மூர்த்தி என்பவரின் மகன் விநாயகம் (வயது 35) சாப்பிட சென்றுள்ளார்.
கடையில் காடை வறுவல் ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த நிலையில், காடை வருவாயில் புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர்களிடம் வாய் தகராறு செய்துள்ளார்.
அதற்கான பில் தொகையும் செலுத்தியவர், காடையில் புழுக்கள் இருப்பதை விடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர், இதுகுறித்த விடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை கண்ட ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் குறித்த உணவகத்திற்கு சென்று உணவு மாதிரிகளை சேகரித்துள்ளார். பரிசோதனை முடிவுகள் வந்ததும் தவறு இழைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.