டூவீலரில் சென்ற பெண்ணை முட்டிதூக்கிய காளை.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!



Tiruvannamalai Arani Near Area Cow Festival Woman Hit Video Goes Viral

பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், வாடிப்பட்டி ஜல்லிக்கட்டை நடந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றாற்போல ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவையும் நடந்து வருகிறது. கடந்த காலங்களை போல அல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் அனுமதியுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே, அனுமதியின்றி காலை விடும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் போது காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது காளை முட்டி தூக்கி வீசும் பதைபதைப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

மொத்தமாக இந்த காலை விடும் நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்த நிலையில், விழாவை ஏற்பாடு செய்து அனுமதியின்றி நடத்திய 5 பேரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.