மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் மாயம்.. பெற்றோர், மணமகன் கண்ணீர்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, புதுகாமூர் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் இருக்கும் நிலையில், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
இதனையடுத்து, மகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட பெற்றோர், மகளின் மனதை சமாதானம் செய்து வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆரணியை அடுத்துள்ள எஸ்.வி நகரம் கிராமத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்ற பெண்மணி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் மகளை பல இடங்களில் தேடியும் காணாததால், பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும், மணமகன் பிடிக்காததால் பெண்மணி வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது வேறு இளைஞருடன் காதல் இருந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.