திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருவண்ணாமலையில் மீண்டும் சோகம்; கார் - அரசு பேருந்து மோதி 5 பேர் பலி.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருமாங்குளம் கிராமம் அருகே பயங்கர விபத்து ஏற்பட்டது.
அரசு பேருந்து - கார் மோதிக்கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காருக்குள் இருந்த 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு துடித்தனர்.
தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர், மீட்பு பணிகளை மேற்கொண்டு படுகாயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோல கார் - லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகியிருந்த நிலையில், மீண்டும் தி.மலையில் விபத்தினால் காரில் வந்த 5 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.