திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிறந்து 2 நாட்களான பச்சிளம் சிசு படுகொலை.. தகாத உறவால் சோகம்.. கொன்று புதைத்த தாய்க்கிழவி?.!
பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. மேலும், குழந்தையின் பாட்டியே பிஞ்சின் உடலை அடக்கம் செய்த பதைபதைப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், ஆலப்புதூர் கிராமத்தை சார்ந்தவர் பவானி. இவர் அதே பகுதியை சார்ந்தவருடன் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமானதாக தெரியவருகிறது.
இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த பவானிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்த நிலையில், பச்சிளம் ஆண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், குழந்தையின் உடலை பவானியின் பாட்டி குழிதோண்டி புதைத்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், விஷயம் தொடர்பாக காவல் துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.