மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் பாலை தானே குடிக்கும் ஆச்சரிய பசு.. காரணம் என்ன?.. திருவண்ணாமலையில் வினோதம்?.!
குட்டிக்கு கூட பால் தராமல் பசு தனது பாலை தானே குடிக்கும் சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வீட்டில் வளர்ந்து வரும் பசு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குட்டி ஈன்றுள்ளது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களாவே பசுவிடம் பால் சரியாக கிடைக்கப்பெறவில்லை.
விவசாயி கன்றுக்குட்டி பாலினை அதிகளவு குடித்திருக்கும் என நினைத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆனால், பசு கன்றை அருகில் விடாமல், தானே பாலை குடித்துள்ளதை அக்கம் பக்கத்தினர் கண்டு கூறியுள்ளனர்.
இதனையடுத்து, விவசாயி மருத்துவரை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். விவசாயியின் வீட்டிற்கு வந்த மருத்துவர் பசுவை சோதித்துவிட்டு அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.
மறப்புநோய் குறைபாடு மற்றும் சத்து குறைபாடு காரணமாக பசு தனது பாலையே குடிக்கும் நிகழ்வு ஏற்படலாம். இந்த பசுவுக்கு சத்து குறைபாடு காரணமாக இப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க கசப்பான எண்ணெயை காம்புகளில் தடவுவது மூலமாக தற்காலிகமாக தடுக்கலாம். முழுமையாக தடுக்க கால்நடை மருத்துவர்களிடம் அணுகி ஆலோசனை பெறலாம்.