மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த தேதியை ஏடிஎம் PIN-னாக வைத்துள்ளீர்களா?.. ரூ.50,000 இழந்த இளம்பெண்..! மக்களே உஷார்..!!
ஏடிஎம் ரகசிய குறியீட்டுக்கு எண்ணாக பிறந்தநாள் வருடத்தை வைத்த பெண்ணின் பணம் திருடப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஏ.டி.எம் உபயோகிப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டியதன் கட்டாயத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைக்காக சென்னைக்கு வந்த நிலையில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இவரது கைப்பை திருடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் உதவியுடன் திருடனை பிடிக்கும் முயன்றும், பிடிக்க இயலாததால் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இந்நிலையில் கைப்பையை திருடிய நபர், ஆதார் கார்டிலிருந்த பிறந்த தேதியை வைத்து ஏடிஎம் PIN மூலமாக பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த ரூ.50,000 பணத்தை திருடியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறும் பொழுது "ஆதார் கார்டிலிருந்த பிறந்த தேதியை வைத்தே வங்கி கணக்கிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. பிறந்த தேதியை யாரும் ஏடிஎம் PIN-னாக வைத்திருக்க வேண்டாம்" என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.