திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு மதுபானத்தில் இறந்து மிதந்த புழு; "இதெல்லாம் நியாயமே இல்லை" - டாஸ்மாக் கடைமுன் குமுறிய ஆசாமி.!
அரசு மதுபானக்கடையில் விற்பனை செய்யப்படும் குவாட்டர் பாட்டிலில் புழு இறந்து மிதந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு சென்ற குடிமகன், சம்பவத்தன்று ரூ.135 மதிப்புள்ள மதுபானத்தை வாங்கியுள்ளார். மதுபாட்டிலை கண்ட குடிமகனுக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்துள்ளது.
அதாவது, அவர் வாங்கிய மதுபான பாட்டிலில் புழு இறந்து மிதந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடிகார ஆசாமி, கடை ஊழியர்களிடம் விஷயத்தை கூறி ஒருமணிநேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும், அங்கு வந்த பிற குடிகாரர்களிடமும் தகவலை தெரிவிக்க, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஆதரவாக ஒருவர் வந்து பேசி கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக போலியான மதுபான ஆலை மூலமாக மதுபானம் சப்ளை செய்யப்படும் சம்பவம் அம்பலமான நிலையில், அதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடந்துள்ளதா? என்ற ஐயமும் குடிமகன்களிடையே ஏற்பட்டுள்ளது.