53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சிறுவனுடன் இன்முகத்துடன் விளையாடி, நொடியில் நடந்த விபரீதத்தால் பரிதாபமாக உயிரிழந்த கன்னியாஸ்திரி.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ஊரை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துவிட்டு, கடந்த 5 மாதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, எறையூர் புனித சார்லஸ் கலை & அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி முதல் வருடம் பயின்று வருகிறார்.
இந்நிலையில், புதன்கிழமை மதிய வேளையில் வகுப்பு முடிந்ததும் கன்னியாஸ்திரிகள் விடுதிக்கு சென்ற கவுசல்யா, விவசாய நிலத்தில் நடைபெற்ற மஞ்சள் அறுவடை பணிகளை பார்க்க சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், விடுதிக்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக தரைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாய பணியாளர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நேற்று மாலை முதல் அவரின் உடலை தேடி வந்தனர். மேலும், 90 அடி கிணற்றில் முழுவதும் நீர் இருந்ததால், அதனை வெளியேற்றி உடல் தேடும் பணி நடைபெற்றது.
இதனையடுத்து, நேற்று காலை நேரத்தில் அவரின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எலவனாசூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.