53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கடன் தொல்லையால் வீட்டில் சண்டை.. மனைவி, மகன், 2 மகள்களை கொலை செய்து குடிமகன் தானும் தற்கொலை.. திருவண்ணாமலையில் பேரதிர்ச்சி.!
குடிக்கு அடிமையான குடும்பத்தலைவனால் ஒரு குடும்பமே கொல்லப்பட்ட பேரதிர்ச்சி சம்பவம் அதிரவைத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், வாடி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரின் மனைவி நளினி. தம்பதிகளுக்கு திரிஷா, சௌந்தர்யா, மோனிஷா, தனுஸ்ரீ, பூமிகா என நான்கு மகள்கள், சிவசக்தி என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகளான சௌந்தர்யா திருமணமாகி கணாவருடன் இருக்கிறார்.
கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த பழனி 3 மகள்கள், மகன், மனைவியோடு வசித்து வந்துள்ளார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்து வந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது குடும்ப தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று போதையில் இருந்த பழனிக்கும், அவரின் மனைவிக்கும் கடன் தொல்லையால் பிரச்சனை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்தவர் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, தனுஸ்ரீ, பூமிகா, சிவசக்தி ஆகியோரை வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.
இவர்களின் நிலைகண்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிருக்கு போராடிய பூமிகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பிறரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.