திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கலவரத்தால் கிராம ஆண்கள் தலைமறைவு.. மூதாட்டியின் சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் தாலுகா, வீரளூர் கிராமத்தில் சுடுகாடு பாதை தொடர்பான பிரச்சனை பல வருடமாக நீடித்து வருகிறது. அருந்ததியின மக்கள் பயன்டுத்தி வந்த சுடுகாட்டுப்பாதை புதர்மண்டி இருக்கும் காரணத்தால், இறந்தவர்களின் சடலத்தை அவர்கள் பொதுசாலை வழியாக எடுத்து செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க கலசப்பாக்கம் தாசில்தார் ஜெகதீசன் பரிந்துரையில், ஆரணி கோட்டாட்சியர் கவிதா பொதுப்பாதையை உபயோகம் செய்ய அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இந்த தகராறில் அருந்ததிய மக்களின் வீடுகள், வாகனங்கள் போன்றவை சேதப்படுத்தப்பட்ட நிலையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்தியுள்ளனர். தற்போது வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஊரில் உள்ள பிற ஆண்களும் தலைமறைவாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரின் உடலை சுமந்து செல்வதற்கு ஆண்கள் இல்லாத காரணத்தால் பெண்களே சேர்ந்து மூதாட்டியின் சடலத்தை சுமந்து சென்றனர்.