திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மின்கசிவால் துயரம்; 5 ஆயிரம் கோழிகள் தீயில் எரிந்து கருகியதால் உரிமையாளர் வேதனை.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், அரங்கல்துருகம் பகுதியில் வசித்து வருபவர் துரைமுருகன். இவர் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில், சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
கோழிப்பண்ணை முழுவதும் தீ பரவி சோகம்:
பண்ணை வேலிக்குள் அடைக்கப்பட்டு இருந்த கோழிகள் அனைத்தும் தீயின் வீரியத்தில் சிக்கி அலறித்துடித்தன. தீயை கட்டுப்படுத்த இயலாத காரணத்தால் கோழிப்பண்ணை முற்றிலும் தீக்கு இரையானது.
5 ஆயிரம் கோழிகள் பலி:
தகவல் அறிந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் சுமார் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. முதற்கட்ட விசாரணையில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் துரைமுருகன் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்.